மனிதனின் இறை தேடல்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும். அந்த தேடலை நோக்கியே அவர்களின் வாழ்க்கை பயணமும் தொடங்குகிறது. அப்படி சில தேடலின் போது நாங்கள் பார்த்த நிகழ்ச்சிகளையும், கேட்டறிந்த விஷயங்களையும்.அனுபவித்த உணர்வுகளையும்,படித்து அறிந்த தவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலை தளத்தை உருவாக்கியுள்ளோம். முதலில் எங்களைப் பற்றிய சிறு குறிப்பு.
சபரிநாதன் ஜெ - இளங்கலை கணிதம் (B.Sc Maths ) முடித்துவிட்டு ஜோதிடத்தின் மீது இருந்த ஆவலால் ஜோதிடம் கற்றேன். அதில் Diplamo படிப்பை முடித்தேன். கிட்டத்தட்ட 20 வருடங்கள் தியானம் கற்றுக்கொண்டு பயிற்சி செய்தேன். புத்தகம் படிக்கும் ஆவல் இருந்ததால் பல அறிய புத்தகங்களை தேடி தேடி படித்து அதை சேகரிக்க தொடங்கினேன். இன்று அரசு அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணி புரிகிறேன். விடுமுறை நாட்களில் ஜாதகம் பார்ப்பது , புத்தகம் படிப்பது போன்றவற்றை செய்து வருகின்றேன்.
நாராயணன் .ரா இளங்கலை பிகாம் முடித்துவிட்டு முதுகலை Mcom படித்தேன். தற்சமயம் ஒரு தனியார் அலுவலகத்தில் சீனியர் accounts மேனேஜர் ஆக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். சிறுவயது முதலே எங்களது குடும்பம் சேலம் ஸ்ரீ சின்னத்திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சேவை செய்து வந்ததால் அதை பார்த்து பார்த்து பெருமாளின் மீது தீராத காதல் ஏற்பட்டது. அந்த காதல் எனக்குள் ஒரு தேடலை தொடங்கியது.அந்த தேடல் திருமால் எழுந்தருளியுள்ள தளங்களை தேடி செல்ல தூண்டியது. அதன் பயனாக இன்று பல்வேறு திவ்ய தேசங்களை தரிசனம் செய்துள்ளேன். அதுமட்டும் அல்லாது அத்தலங்களில் பெருமாளுக்கு நடைபெரும் விழாக்கள் , பூஜைகள் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். இந்த தேடல் வைணவத் தளங்கள் மட்டும் அல்லாது அருகில் உள்ள பிரசித்தி பெற்ற மற்ற திருத்தலங்களையும் காண வழி வகுத்தது. இன்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு திருத்தலங்களுக்கு சென்று வருவதையும் சேலம் ஸ்ரீ சின்னத்திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளேன்.