Loading...

மனிதனின் இறை தேடல்

ஒரு சமூக உயிரினமான மனிதன் தன்னை செம்மைப்படுத்திக்கொள்ள தேர்ந்தெடுத்த வழி முறைகளில் ஒன்றுதான் இந்த இறை தேடல் ...

12 வீடுகள் (அ) பாவங்கள்

ஒன்றாம் வீடு

உயிர், தோற்றம், தேகம், நிகழ்கால சிந்தனை, பிறந்த இடம்.


இரண்டாம் வீடு

வாக்கு, குடும்பம், தனம்-கையில் இருக்கும் பணம், ஊதியம், காசோலை,தங்கம்,வெள்ளி(உடனே பணமாக மாற்றக்கூடியவை) போன்றவை, ஆரம்பக்கல்வி, மொழி.


மூன்றாம் வீடு

தாய், மாமியார், இளையசகோதரம், காதலன்/காதலி, பரிணாம வளர்ச்சி, வீரம், முயற்சி, வீரியம், மனோவலிமை, அண்டைவீட்டார், உதவி, தகவல்தொடர்பு, சிறுதூரப்பயணம், எழுத்து, ஒப்பந்தம், பத்திரம், ஆவணங்கள்(Documents), கையொப்பம், பேரம்பேசுதல்,தந்தை, பாகப்பிரிவினை, வட்டி, ஞாபகம் (திடீர் யோசனை).


நான்காம் வீடு

அசையும் அசைய சொத்துக்கள், சுரங்கங்கள், புதையல், செய்யப்போகும் தொழிலுக்கேற்ற படிப்பு, சவக்குழி, விதை(மூலம்), கர்பஸ்தானம், உயர்கல்வி, ஜாதகன் வசிக்கும் ஜாதகன் வசிக்கும் இடம்(வாடகை அல்லது சொந்த வீடு), நல்ல & தீமை செயலுக்கான(10ம் இடம்) காரணம், ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை, வீட்டு உபயோகப்பொருட்கள், உற்பத்தி.


ஐந்தாம் வீடு

குழந்தை, இஷ்டதெய்வம், தாய்மாமன், மனம், ஆராய்ச்சிக்கல்வி, எதிர்கால சிந்தனை, விளையாட்டு, சூதாட்டம், பொழுதுபோக்கு, குதிரை பந்தயம், லாட்டரி, தாயம், சீட்டாட்டம், கலைகள், ஜோதிடம், மந்திரம், மாந்த்ரீகம், பங்குசந்தை, விருந்தோம்பல், கேளிக்கைகள்.


ஆறாம் வீடு

நோய், ருணம் (காயங்கள்), பகைமை எண்ணம், அடிமை எண்ணம், கடன், பயம், சண்டை, பிரிவு, சேவை, திருட்டு, வழக்குகள், வாடகை, போகியம் & குத்தகை, சிக்கனம், ஆணவம், அடமானம், தரகு, (நல்ல & கள்ள)காதல், பொறாமை, சுயநலம், காவல் நிலையம், தினந்தோறும் தவறாமல் வேலைக்கு செல்லுதல், விடாமுயற்சி, போட்டித்தேர்வுகள்,வீட்டுவிலங்குகள்.


ஏழாம் வீடு

மனைவி, பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், சொந்த பந்த கூட்டங்கள், திருடர்கள், நண்பர்கள், (நேரடியான) எதிரிகள், பகைவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள்,காவலர்கள், உடலுறவு.


எட்டாம் வீடு

ஆயுள், (ஆயுள் காப்பீடு, உயில்) - போன்றவற்றின் மூலம் எதிர்பாராத பணம், வரதட்சணை, லஞ்சம் (ஊழல்), ஜீவனாம்சம் (பெறுதல் அல்லது கொடுத்தல்), ஓய்வு ஊதியம், ஜப்தி, மாங்கல்யம்,உடலுறுப்பு பழுது, விபத்து, கண்டம், அறுவை சிகிச்சை, (ஜாமீன்,வாதாடுதல், துப்பறிதல்) - தீர்ப்புக்கு முன், சட்டவிரோத செயல்கள் (மூலம் பணம் சம்பாதித்தல்), நம்பிக்கை துரோகம், மருந்துகள், இரசாயனக்கூடம், அழிக்கப்பட்ட கட்டிடங்கள், அச்சுறுத்தி தேவைகளை நிறைவேற்றி கொள்ளுதல் (blackmail).


ஒன்பதாம் வீடு

தந்தை, மாமனார், குரு, குலதெய்வம், பாக்கியஸ்தானம், (அனைத்து)மதகுரு, நீதிபதி, புனிதயாத்திரை, வேதங்கள், (அனைத்து)கோவில், சட்டம், தத்துவம், ஒப்பந்த முறிவு, பதிப்பகம், இறந்தகால சிந்தனை, பணம் புரட்டுதல்(அசல்), (குரு சிலநேரங்களில்) ராஜதந்திரம் மற்றும் சுயநலத்தை குறிக்கும், அறக்கட்டளைகள், வெளிநாட்டு தொடர்பு, நீண்ட தூரப்பயணம், ஏற்றுமதி & இறக்குமதி.


பத்தாம் வீடு

தொழில், உப தொழில், கௌரவம், புகழ், சமூக அந்தஸ்து, இறுதிச்சடங்குகள் (இறப்பு), பதவி, தீர்ப்பு, சுவீகாரம்(தத்துஎடுத்தல்), அதிகாரம், சந்தை, வாங்குதல் மற்றும் விற்றல்(trading), ஏலம், கட்சிகள்(குறியீடுகள், சின்னங்கள்), அங்கீகாரம்(trade mark).


பதினொன்றாம் வீடு

மூத்த சகோதரம், தலைவர்கள், முதலாளிகள் (தேவைகளை நிறைவேற்றிவைப்பவர்கள்), ஆராய்ச்சிக்கல்வியில் வெற்றி, லாபம், வெற்றி, ஆசை நிறைவேறுதல், பெருங்கூட்டங்கள்(கட்சி, கோவில் பண்டிகை), சட்டசபை, நகராட்சி, பாராளுமன்றம், மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், இளையதாரம்(பலதாரம்).


பன்னிரெண்டாம் வீடு

,விரையஸ்தானம், கடன் நிவர்த்தி, மூலதனம், முதலீடு, கடல் தாண்டிய பயணம், வங்கியில் பணம் வீட்டுவிலங்குகள். இருப்பு, காசோலைகள், தூக்கம், சுடுகாடு, நந்தவனம், தனிமை, தாழ்வுமனப்பான்மை, அவமானம், ஏழ்மை (பிச்சையெடுத்தல்), மனநோய், பழிவாங்குதல், சந்தேகம், உறுப்பிழத்தல், (மறைமுகமாக)சதித்திட்டம் தீட்டுதல் ,விரக்தி மனப்பான்மை, நோய்நிவர்த்தி, தியாகம் செய்தல்,(சிறை வாசம்,தண்டனை பெறுதல், அபராதம் கட்டுதல், நஷ்டங்கள்)- தீர்ப்பிற்கு பின், வனவிலங்குகள்.