y
Loading...

மனிதனின் இறை தேடல்

ஒரு சமூக உயிரினமான மனிதன் தன்னை செம்மைப்படுத்திக்கொள்ள தேர்ந்தெடுத்த வழி முறைகளில் ஒன்றுதான் இந்த இறை தேடல் ...

குரு

தொழில்காரகன்

((குருவுக்கு அதிபதியான பிரம்மாவிடம் இருந்தே தொழில் அடிப்படையிலான நான்கு (பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர) வர்ணங்கள் பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன) ஜாதகத்தில் குரு பரிகாரங்களுக்கு (வழிகாட்டி & நிவர்த்தி) வெற்றிகளை கொடுப்பவர்.)

உடல் பாகங்கள்

வயிறு (உடலில் பெரியது), உடல் பருமன் (மரியாதைக்குரிய தோற்றம்), வாயு சம்பந்தமான நோய், கொழுப்பு.

சிறப்புக்கள்

ஞானம், வேதம், புனிதயாத்திரை, எண்ணம் மற்றும் ஞாபகசக்திக்கு அதிபதி, கடன் & நோய் நிவர்த்தி, தீர்ப்பு மற்றும் முடிவெடுக்கும் திறன், சுயநலம், பக்தி, பெரிய வெற்றிகள், பதவி உயர்வு, பொதுவாழ்க்கை, தியாகம், உயர்மதிப்பு, விரிவாக்கம், உற்பத்தி, கட்டித்தங்கம் (biscuits).

உறவு முறைகள்

ஜாதகர், பெரியப்பா, குழந்தை.

குறிக்கும் இடங்கள் ( & தொழில்கள்)

கோவில்கள் (அனைத்து மதங்கள்), தர்ம ஸ்தாபனங்கள், அறக்கட்டளைகள், கல்வி நிலையங்கள், பெரிய கட்டிடம், பெரிய விளையாட்டு அரங்கம், மருத்துவமனைகள், மத்திய-மாநில அரசுகள் சேர்ந்து நிறைவேற்றும் திட்டங்கள் (எ.கா. - பாலம், மருத்துவமனை, உள்கட்டமைப்பு, போக்குவரத்து ரோடு, தொடர்வண்டி பாதைகள், விமான நிலையம், பேருந்து நிலையங்கள்),பிரச்சாரம், விளம்பரங்கள்.

வெளி உறவுகள்

குரு (முழுமையடைந்தவர்), வழிகாட்டி (ஆசிரியர்), எல்லா துறைகளிலும் உள்ள குரு & ஆசிரியர்கள்.

ராஜநீதிகள்(ராஜதந்திரம்)

அர்த்த சாஸ்திரம், சுக்கிரநீதி(சுக்கிரன்), பார்ஹஸ்பதியம்(குரு), செய்முறை ஞானம்,

பஞ்சதந்திரம்

(1. நட்பை கெடுப்பது, 2. நட்பை பெறுவது, 3. அடுத்து கெடுப்பது (வளரவிட்டு ஒட்டுமொத்தமாக வேரோடு அழிப்பது), 4. அடைந்ததை அழிப்பது, 5. ஆராயாமல் செய்வது.)

தொழில்கள்

சட்ட ஆலோசகர், நிதித்துறை (வங்கி, கருவூலம்), நீதித்துறை (நீதிபதிகள்), மந்திரிகள் (அரசாங்கம்), சட்டம் இயற்றுபவர்கள், மதபோதகர், அறநிலையத்துறை.

தோற்றங்கள்

பெண்களை போன்று ஆண்களும், ஆண்களை போன்று பெண்களும் நடந்துகொள்ளவர்கள். அதாவது பெண்களை போல் ஆண்கள் தோடு, நீண்டமுடி, (எ.கா.புரோஹிதர்கள்), சிலர் சமைப்பது போன்றவை, அதேபோல் பெண்கள் ஆண்களை போல் உடை அணிவது, கூந்தலை வெட்டிகொள்வது போன்றவற்றை விரும்புவார்கள்.

குணங்கள்

  • தன் சக்திக்கு மீறிய செயல்களை செய்யமாட்டார்கள்.
  • பெரியோர்களை மதிப்பார்கள், அதேபோல் தன் சக்திக்கு குறைந்தவர்கள் தன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.
  • பழைய கொள்கைகளை உடையவர்கள், விரைவில் நாகரிக மாற்றங்களுக்கு உடன்பட மாட்டார்கள்.
  • மற்றவர்களை சீர்திருத்தும் பணிகளை செய்வார்கள்.