Loading...

மனிதனின் இறை தேடல்

ஒரு சமூக உயிரினமான மனிதன் தன்னை செம்மைப்படுத்திக்கொள்ள தேர்ந்தெடுத்த வழி முறைகளில் ஒன்றுதான் இந்த இறை தேடல் ...

புதன்

(பலவிதமான பரிமாணங்களை மனத்தளவிலேயே யோசிக்கக்கூடியவர்கள்.)

உடல் பாகங்கள்

நரம்புமண்டலம் (72000 நாடி நரம்புகள்), ENT (காது, மூக்கு, தொண்டை), இடது மூளை செயல்பாடுகள்.

உறவு முறைகள்

தாய் மாமன்,இளையசகோதரன் (சகோதரன்/சகோதரி).

மற்ற (வெளி) உறவுகள்

ஆண் மற்றும் பெண் நண்பர்கள், சிறுவயது (வயதுக்கு வராத) ஆண் பெண்களையும் குறிக்கும், மாணவர்கள், காதலன்/காதலி, தொழில் முறை கூட்டாளிகள், அண்டைவீட்டார்கள்.

தொழில்கள்

தகவல் தொடர்பு துறைகள்(தொலைக்காட்சி, ரேடியோ, செய்திதாள், வலைத்தளங்கள் போன்றவை), செய்தி ஆசிரியர்கள், செய்தி தொடர்பாளர்கள், மேடை பேச்சாளர்கள், பன்மொழித்திறன், தூதுவர்கள், தரகர்கள், ஏதிர்கால கணித & வணிக யூகங்கள், பங்குசந்தை, வியாபாரம்(பேரம் பேசுதல், வாங்குதல் & விற்றல்), புலனாய்வு துறை, துப்பறிதல், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், வழக்கறிஞர்கள்(வாதாடுதல்), மொழிபெயர்ப்பாளர்கள், எழுத்தாளர்கள், தட்டச்சு, கணிபொறிஅறிவு, கல்வி, நூலகம், காகிதம், புத்தக வெளியீடு, எழுத்து துறை, பதிவுத்துறை, நுண்கலைகள்(வர்மக்கலை போன்று), விஞ்ஞான அறிவு, வானவியல், ஆராய்ச்சியாளர்கள்(எல்லா துறைகளிலும்), கணித ஆசிரியர்கள், வங்கி கணக்காளர்கள், ஆடிட்டர்கள், புள்ளி விவர ஆராய்ச்சியாளர்கள், வேதியியல் வல்லுநர்கள்(மருந்து), விவசாய விதைகளை பதப்படுத்தி விற்பனை செய்பவர்கள், விதைகளை மரபணு மாற்றி விற்பனை செய்தல், பயிர்களுக்கு ரசாயன பூச்சிமருந்துகள், வளர்ச்சி மருந்துகள், வித்தை(மந்திரவாதிகள்)காரர்கள், ஜோதிடம், வாகனங்கள் போன்றவற்றில் புதுமைகளை புகுத்தி தயாரித்தல்.

மற்றவைகள்

இரட்டை தன்மை, கலவை சுவை, பூதக்கண்ணாடி, நுண்ணோக்கி, கடிகாரம், நாட்காட்டி (காலண்டர்), சமயோஜித புத்தி, முன்யோசனை (திட்டமிடல்), தர்க்கரீதியான அறிவு, சேமிப்பு, பகுத்தறிவு, வேகம், விவேகம், சுறுசுறுப்பு, நகைசுவை உணர்வு, பரிணாமவளர்ச்சி, ஒளி & ஒலி அலைகள், ஒப்பந்தம், பதப்படுத்துதல், பொதுஜன வசியம் உண்டு, எதிர்பாராத விதமாய் திடீரென்று நடக்கும் சம்பவங்கள்.

சிறப்பு குணங்கள்

  • தவணை முறையில் பணம் செலுத்துபவர்கள்.
  • பக்கவாதம் (நரம்புமண்டல பாதிப்புகளால்).
  • பயணத்தில் அதிக விருப்பம் உடையவர்கள்.
  • ஆகாயவிமானம் & பாராஷூட் போன்றவற்றில் பயணம் செய்ய அதிக விருப்பம் உடையவர்கள்.
  • உப தொழில்கள் ஏதாவது ஒன்று செய்வார்கள் (முதன்மை தொழிலோடு).
  • குருவில்லாமல் ஒரு கலையை கற்றுக்கொள்பவர்கள்
  • தோல்விகளால் துவண்டுவிடாமல் முயற்சி செய்து இறுதியில் வெற்றிபெறுபவர்கள்.
  • தலைமை தாங்கும் குணம் இல்லை (அதிக அறிவால்).
  • பழமையை வெறுப்பவர்கள், புதுமையை நோக்கி செல்பவர்கள்.