மனிதனின் இறை தேடல்
(நீண்ட ஆயுள்)
தோல், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் பாகங்கள், உடல் ஊனம் (சாதாரணமான).
சித்தப்பா, மகன், தத்து புத்திரன் (இறுதி சடங்கிற்காக தத்து எடுத்தல்).
வேலை ஆட்கள், பொதுமக்கள், அடிமைகள்,கொத்தடிமைகள், அனாதைகள், அகதிகள், வளர்ப்புப்பிராணிகள் (கால்நடைகள், பறவைகள்).
ஆழ்ந்த சிந்தனை, தியானம், பிரச்சனையை நுண்ணோக்கும் திறன், சிக்கனம் (தனம், பேச்சு), தாமதம், சோம்பேறித்தனம், முதுமை, ரகசியங்கள், தாழ்வுமனப்பான்மை, சேவை மனப்பான்மை (எதையும் எதிர்பார்க்காமல்), தியாகம் செய்தல்,இரக்க குணம், உடலுறவு (மிருகங்கள் போன்று இனப்பெருக்கத்தித்திற்கு மட்டும், வன்மை & மென்மை இரண்டை பற்றி எந்த எண்ணமும் இல்லாதது).
அடிமைத்தொழில்(வேலை ஆட்கள்), கழிவுகளை & குப்பைகளை சுத்தம் செய்யும் தொழில், மயான வெட்டியான், கச்சா எண்ணெய்(நிலத்தில் இருந்து கிடைப்பது), உணவுக்கான எண்ணெய், சுரங்கத்தொழில், பழைய பொருட்கள் வியாபாரம், நிலத்திற்கடியில் விளையும் பொருட்கள்(கொட்டைகள், கிழங்கு, வைரம், சலவை கற்கள், உலோகங்கள், நிலக்கரி,...etc.), தூர்வாருதல், மக்கிபோதல், இயற்கை உர வியாபாரம், கால்நடைகள் வைத்து தொழில்(வளர்த்தல்), குயவர்கள், பழைய பொருட்களை பழுது நீக்கி சரிசெய்தல்(கடைசி நிலை உபயோகம்), விலங்குகளின் உறுப்புகளை(தோல், உரோமம், பற்கள், தந்தம், மற்றும் பல) வைத்து தொழில் செய்பவர்கள்.
குளிர்ச்சி, உடல் உறுப்பு பழுது அடைதல், கடன் வாங்குதல், சொக்கத்தங்கம் (நிலத்தில் இருந்து கிடைப்பது), கழிப்பிடம், ஸ்டோர் ரூம், நாகரிகம் & பண்பாடு போன்றவற்றில் வளர்ச்சி அடையாத மக்கள், அனாதை விடுதிகள், அகதிகள் முகாம்கள், மறுவாழ்வு மையங்கள், சுரங்கங்கள், குகைகள். கோள்களின் வரிசையில் இறுதி கோள் (காலபுருஷனின் இறுதி நிலை) ஆக இருப்பதால் இறப்பு, மறுபிறப்பு, இறுதி காலங்கள் போன்ற சிந்தனைகள் மற்றும் வாழ்கை போன்றவற்றை அளிக்கும். "காலம் கடந்துவிட்டது" என்னும் சொல் & செயலுக்கு காரணமான கிரகம்.