Loading...

மனிதனின் இறை தேடல்

ஒரு சமூக உயிரினமான மனிதன் தன்னை செம்மைப்படுத்திக்கொள்ள தேர்ந்தெடுத்த வழி முறைகளில் ஒன்றுதான் இந்த இறை தேடல் ...

சூரியன்

(ஈடு இணையற்ற ஒளி)

(செல்வம், வலிமை , புகழ், அழகு, அறிவு, துறவு) இந்த 6 ம் ஒரு சேர பெற்றவர்கள்.

உடல் பாகங்கள்

வலது கண், இதயம், மூளை

உறவு முறைகள்

தந்தை, மாமனார் , மூத்த மகன்1

மற்ற உறவுகள்(அதிகாரிகள் )

ஆத்ம ஞானிகள், மன்னர்கள், பெரும் தலைவர்கள், முப்படைகளின் தலைமை தளபதி, அரசு ஆணைகள்.

மன நிலை

தைரியம், வசீகர சக்தி, தனித்தன்மை,திறந்த மனம்(பரசியம் 2), ஞானம்,பொதுநலம், தன்னம்பிக்கை அதிகம்.

சிறப்புகள்

அரசாளுமை, அதிகாரம், சமூக அந்தஸ்து, கட்சி, சின்னங்கள்,காலத்தால் அழியாதவை3, சிரஞ்சீவிகள்4, அரசு வரிகள், பொது கூட்டங்கள்5, அரசாங்க கட்டிடங்கள்6.

தொழில்கள்

அரசியல் தலைவர்கள், அரசுப்பணி, நிரந்தர வருமானம், பரம்பரை(தாய் & தந்தை) தொழில்கள்,சூரிய சக்தி மின்சாரம்,மாத வாடகை(பெறுதல் அல்லது கொடுத்தல்).

சிறப்பு குணங்கள்:

  • மற்றவர்களின் சுதந்திரத்தில் இவர்கள் தலையிட மாட்டார்கள் , அதேபோல் இவர்களின் சுதந்திரத்தில் தலையிட மற்றவர்களை அனுமதிக்க மாட்டார்கள்.
  • எதையும் தேடிச்செல்லாதவர்கள்.
  • தனது இணை(கணவன் (அ) மனைவி)யை பிரியும்(இறப்பு(அ) விவாகரத்து (அ)வேறுவகையில்) சூழ்நிலை ஏற்படும்.(அ) விவாகமின்மையும் ஏற்படலாம்.
  • நீண்ட காலம் நடக்கும் செயல்கள் (பரம்பரை தொழில்கள் , உறவுகள், வியாதிகள் , ஓய்வூதியங்கள், நீண்ட காலம் உயிர் வாழ ,பரம்பரையாக தொடரும் தோஷங்கள் ... மற்றும் பல)

குறியீடுகள்:

  1. தந்தைக்கு பிறகு குடும்பத்தை தந்தை போல் பாதுகாப்பவர்கள்.
  2. ரகசியத்தின் எதிர்சொல் (வெளிப்படையான).
  3. உலக அதிசயங்கள் போன்றவை.
  4. காலத்தால் மறக்க முடியாத மனிதர்கள்.
  5. கட்சி கூட்டங்கள், பண்டிகைகள்.
  6. கல்வி நிலையம், அலுவலகம், விருந்தினர் மாளிகை ........