Loading...

மனிதனின் இறை தேடல்

ஒரு சமூக உயிரினமான மனிதன் தன்னை செம்மைப்படுத்திக்கொள்ள தேர்ந்தெடுத்த வழி முறைகளில் ஒன்றுதான் இந்த இறை தேடல் ...

சுக்கிரன்

மழைக்கோள், விடிவெள்ளி(சூரியனுக்கு முன் தோன்றுவதால்)

உடல் பாகங்கள்

கண்கள் (ஆக்ஞா), ஆண் & பெண் இருவரின் பாலுறுப்பு (உடலுறவு) பாகங்கள், பெண்மை தன்மை, கர்ப்பப்பை.

உறவுகள்

மனைவி, மூத்த சகோதரி.

உணர்வுகள்

பெண்களுக்கே உரிய மென்மையான காதல், அன்பு, பாசம், (கீழ்த்தரமான காமம், வெறி, உடல்பற்று, மிருகத்தன்மை இல்லாதது).

சுபநிகழ்ச்சிகள்

திருமணம், நிச்சயதார்த்தம், கோவில், குழந்தை பிறப்பு, கடை திறத்தல், சாந்திமுகூர்த்தம், காது குத்துதல், வீடுகட்டுதல் போன்ற அனைத்தும்.

தொழில்கள்

வாசனை திரவியங்கள், பெண்களின் அழகுசாதன பொருட்கள், வட்டி தொழில், ரப்பர், அழகு நிலையங்கள் புது வாகன தொழில்கள், பூ- வியாபாரம், துணி வியாபாரம் (தையல்காரர்கள், நெசவுத்தொழில்......), மென்கலைகள் சம்பந்தப்பட்ட தொழில்கள் (நடிப்பு,பாட்டு, கவிதை, நடனம், வண்டி, ஓவியம், சிற்பிகள்,...etc.), கைவினைஞர்கள், கண்ணாடி பொருட்கள், ஆடம்பர பொருட்கள், வீடுகட்ட அழகுசாதன பொருட்கள், கோவில் பூஜை பொருட்கள், மகளிர் சங்கங்கள் & மன்றங்கள், கட்டில், மெத்தை தொழில்கள், மெருகேற்றுதல்.

சிறப்புக்கள்

தானியங்கள், பணம், சொத்து, வரதட்சணை, ஆபரணங்கள், கூட்டுறவு, ஒற்றுமை, வண்டி, வாகனம், உயர் ரக ஆடைகள் (பட்டு போன்றவை), நல்ல அறுசுவை உணவு, பழசாறு, ஆடம்பர பொருட்கள், வீடு & அலுவலகங்களை அழகுபடுத்தல், லாபங்கள் (எல்லாவற்றிலும்), போனஸ் பெறுதல்.

குணங்கள்

பிறர் செய்த நன்மை தீமைகளுக்கு இவர்கள் பொறுப்பேற்பார்கள். விரைவில் செலவு செய்ய மாட்டார்கள். ஒருவரின் விருப்பங்களை சுக்கிரன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.